வயதான கதாநாயகர்களுடன் நடிக்கத் தயார் : அஞ்சலி!!

446

A1

குடும்பத் தகராறு சர்ச்சைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பா டக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி படங்களில் நடிக்கிறார்.

தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவரை இளம் கதாநாயகர்களுடன் நடித்த அவர் இப்போது வயதான பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சம்மதித்துள்ளது தெலுங்குப் படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேறு சில இளம் கதாநாயகிகள் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. அஞ்சலி சம்மதம் தெரிவித்தார்.

வயதான கதாநாயகர்களுடன் ஜோடி சேர்வதால் இளம் தாநாயகர்கள் அஞ்சலியை ஒதுக்கி விடுவார்கள் என பேச்சு நிலவுகிறது. இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, வயதான ஹீரோக்களுடன் நடிப்பது தவறல்ல. நான் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.