வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் 47வயது மதிக்கத்தக்க ஒருவர் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரியந்கர கேவாகே என்ற 47 வயது திருமணமாகாத நபரே நேற்று இரவு வீட்டிலிருந்து சென்று இன்று காலை ஈரப்பெரியகுளம் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவரது சடலத்தை மீட்ட பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் மருத்துவப்பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீஷன்-







