வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனிக்கு ஏற்பாடு !

709

22

இலங்கை திருநாட்டில் வவுனியாவின் புகழ்பெற்ற தேசிய பெண்கள் பாடசாலையாக திகழும் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலைச் சமூகத்தால்  கல்லூரியை கெளரவபடுத்தும் வகையில் மாபெரும் நடைபவனி ஒன்று எதிர் வரும் 20.06.2015  சனிக்கிழமை இடம்பெற உள்ளது .

மேற்படி நடைபவனியானது பாடசாலையில் இருந்து காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா நகரம்  வழியாக மீண்டும் வந்தடையவுள்ளது .

1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட பாடசாலை இன்று 2015 இல்பல்வேறுபட்ட சவால்களை சந்தித்து சமுதாயத்தில் பல்வேறுபட்ட கல்விமான்கள் மற்றும் நற்பிரஜைகளை உருவாக்கி 125 வருட சாதனை பயணத்தில் வெற்றி நடை போடுகின்றமையை உலகறியச் செய்யும் நோக்குடன் இந்த நடை பவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

மேற்படி நடை பவனியில்  அதிபர் ஆசிரியர்கள்  மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என அனைவரும் கைகோர்க்கும் வண்ணம் கல்லூரி சமூகம்  வேண்டுகோள் விடுக்கிறது .