வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.06) இடம்பெற்ற விபத்தில் 65 வயதான முதியவரொருவர் பலியானதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவர் ஒருவர் பயணித்த கார், துவிச்சக்கரவண்டியை மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், கனகராயன்குளத்தை சேர்ந்த 65 வயதுடைய நாகமுத்து தெய்வேந்திரப்பிள்ளை என்பவர் பலியாகியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.