
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட் வெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட இரு வீரர்கள் பிடியெடுக்க முயன்ற போது மோதிக் கொண்டனர்.
இருவருமே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்வெஸ்ட் தொட ரில் சஸ்சக்ஸ் நகரில் நடந்த ஆட்டத்தில்இ சஸ்சக்ஸ் அணியுடன் சர்ரே அணி மோதியது.
19ஆவது ஓவரில் சஸ்சக்ஸ் அணி 141 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, பிடியாக வந்த பந்தை பிடிக்க சர்ரே அணி வீரர்கள் ராரி பர்ன்சும், மொய்சஸ் ஹென்ரிக்சும் முயன்று மோதிக் கொண்டனர். மோதிய வேகத்தில் இருவரும் பலத்த காயமடைந்து மைதானத்தில் விழுந்தனர்.
இருவருக்குமே பலத்த அடிபட்டிருந்தது. அவர்கள் மைதானத்தில் கிடந்த நிலை சக வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைதானத்தில் இருந்த பெண் ரசிகைகள், கண்ணீர் விட ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மைதானத்திற்கு 3 அம்பியூலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து காயம டைந்த பர்ன்சும், ஹென்ரிக்சும் அங்குள்ள ஷிசெஸஸ்டர் மருத்துவமனை யின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.





