கதாநாயகனாகும் ராகவா லோரன்சின் சகோதரர்!!

441

Lorans

திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா – 2 படத்தில் இடம் பெற்ற சில்லாட்ட பில்லாட்ட என்ற பாடலில் ராகவா லோரன்ஸ்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இளம் நடனப்புயல் என்ற ஆச்சரியத்துடன் இடம் பெற்றவர் லோரன்ஸின் சகோதரர் எல்வின்.

இவர் தற்போது நாயகனாக அறிமுகமாகவிருக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்டால், நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் அண்ணனே கதைகளை கேட்டு எமக்குப் பொருத்தமான கதையை தெரிவு செய்து வருகிறார்.

அவரின் அறிவுரைப்படி, நடனம் மட்டும் இல்லாமல் உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் எம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

படத்தின் தலைப்பு மற்றும் ஏனைய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் எல்வின். இதைச் சொல்லி முடித்தவுடன் அண்ணனைப் பார்த்தார். நீங்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லிவிட்டேன் சரியா என்பது போல் பார்க்க, அண்ணன் ராகவா லோரன்சும் சரியென சந்தோஷமாக தலையாட்டினார்.