வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டு விழா!!

821

vnet

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டு விழா நாளை (27.06.2015) சனிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு அருட்சகோதரி திரோசம்மா சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், சிறப்பு விருந்தினராக அருட்சகோதரி ஏ.விக்ரர் சூசை, அருட்சகோதரி கிறிஸ்ரா மரியதாஸ், கௌரவ விருந்தினராக தபால் அதிபர் பி.றோகண அபயரத்ன ஆகியோர் சிறப்பிக்கவுள்ளனர்.

பாடசாலை அதிபர், பாடசாலை மாணவர்கள். பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகளினால் இவ் வைபவம் சிறப்புற இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளும் வண்ணம் பாடசாலை சமூகம் அன்புடன் அழைக்கின்றது.