அலவத்துகொடை பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப்பகுதி லயன் ஒன்றில் வசிக் கும் 11 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தியதாக சந்தேகிக்கப் படும் 35 வயதுடைய பேச்சுத்திறன் அற்ற ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் 17ஆம் திகதி இரவு கைது செய்துள்ளனர். அத்துடன் சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
லயன் தொகுதியின் பொது மலசல கூடத்திற்கு சென்ற சிறுமியை பின் தொடர்ந்து உள்ளே புகுந்த நபர் சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சந்தேக நபரை தேடிச்சென்ற பொலிஸாருக்கு குறித்த சந்தேக நபர் வீட்டில் கழு த்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்துப் பொலிஸார் துரிதமாகத் தொழிற்பட்டு அவரை காப்பாற்றிய பின் கைதுசெய்துள்ளனர்.






