
இன்புளுவென்சா எச்.1 என்.1 வைரஸ் தொற்று இலங்கையில் மிக வேகமாக பரவி வருவது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை அந்த வைரஸ் தொற்றுக் காய்ச்சலுக்கு இலக்காகி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 24 பேரில் 10 பேர் கர்ப்பிணிகளாவர் என தாய் சேய் மரணம் மற்றும் நோய்களை தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் முகாமையாளர் விஷேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்புளுவென்சா எச்.1 என்.1 வைரஸ் காய்ச்சலானது மிக வேகமாக பரவி வரும் நிலையில் எவருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் அதனை கணக்கில் எடுக்காமல் இருப்பதைத் தவிர்த்து உடனடியாக அருகில் உள்ள வைத்தியரை நாடுமாறும் அவர் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி கர்ப்பிணித்தாய்மார்கள் அனைவருக்கும் ஏற்கனவே இன்புளுவென்சா எச்.1 என்.1 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருவதாகவும் அவற்றை வைத்தியசாலைகளிலேயே ஏற்ற முடியுமாக இருப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட நிலைமைகள் ஏற்படும் போது உடனடியாக அருகில் உள்ள வைத்தியரை சந்திப்பதி சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





