இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சலால் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு!!

828

H1

இலங்கையில் பரவிவரும் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா அரச பொது வைத்தியசாலையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையே இந்தக் வைரஸ் காய்ச்சல் அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியவர்களில் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களே இந்த காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாகவும் வைத்தியர் சுதர்சினி தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றாத வகையில் தனிப்பட்ட சுகாதார முறைகளைக் கைக்கொள்வதுடன், நோய் அறிகுறிகளைக் கண்டதும் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய உதவி பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த வைரஸ் பரவுவதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.