சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!!

939

jaffna

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று அதிகாலை 12.30 அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜப்பான் ஊடாக கனடாவுக்கு செல்ல முற்பட்டுள்ளார்.

இந்தநிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அது போலி கடவுச் சீட்டு எனத் தெரியவந்துள்ளது.

மேலும் கைதானவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதான ஒருவராவார். இவரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.