வவுனியா பிரதேச செயலகத்தின் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரைணயுடன் வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் கல்விபயிலும் 300 மாணவர்கள், சாதாரண மற்றும் உயர்தரம் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் சந்தை நிகழ்வு இன்று (22.06.2015) காலை 9 மணி முதல் 1 மணிவரை வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா தலைமையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இதில் பல தொழில்வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர். தொழில் வாய்ப்புப்பெறுவது தொடர்பான விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-








