
1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், கவிதா ஆந்திர மாநிலம் நந்திகாமாவில் இருந்து விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வீதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னர் லொறி மீது இவரது கார் திடீரென மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
காருக்குள் இருந்த கவிதாவுக்கு தலையில் பலத்த அடிபட்டு இரத்தம் கொட்டியது. இதனால் அவர் மயங்கினார். விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் காருக்குள் இருந்த கவிதாவை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





