வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!(படங்கள்)

576

வடமாகாண துடுப்பாட்ட சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற 20க்கு 20 துடுப்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் திரு.ரதீபன் தலைமையில் 20.06.2015 சனிக்கிழமை நடைபெற்றது.

இன் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதாரலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான M.P.நடராஜ், ம.தியாகராஜா ஆகியோர் கலந்துகொண்டதுடன் விளையாட்டு வீரர்களையும் கௌரவித்தனர்.

இங்கு உரையாற்றிய வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் ரதீபன், வவுனியா மாவட்ட கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்காக இருபது ஏக்கர் காணியை (மைதானம் அமைப்பதற்காக) பெற்றுத்தருமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக் காணியை பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்வதாக மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

-பிராந்திய செய்தியாளர்-

FB_IMG_1434984101825 FB_IMG_1434984107273 FB_IMG_1434984109395 FB_IMG_1434984111877 FB_IMG_1434984114007 FB_IMG_1434984116158 FB_IMG_1434984122289 FB_IMG_1434984124660 FB_IMG_1434984126729 FB_IMG_1434984128984 FB_IMG_1434984131130 FB_IMG_1434984133556 FB_IMG_1434984150028