வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (22.06.2015) நடைபெற்றது.
இன் நிழல்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, செட்டிகுளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.யேசுதாசன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் லதாங்கி, விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் மாதவன், செட்டிகுளம் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் சந்திரமோகன், உறுப்பினர் கண்ணன், செட்டிகுளம் நம்பிக்கை நிதியத்தின் பொருளாளர் இருதயராஜன் பாபு, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், கல்வி சமுகத்தினர் கலந்து சிறப்பித்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-




















