தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் தரிப்பிடத்தில் இன்று (23.06.2015) காலை 10 மணியளவில் கொடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் ரோஹன கமகே, வவுனியா மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் திருமதி.வி.எம்.வி.குறூஸ், ஆர்.தனாபல( திட்ட முகாமையாளர், இந்திய வீடமைப்புத்திட்டம்), வவுனியா பிரதேச செயலக மேலதிக பிரதேச செயலாளர் திருமதி கர்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் ரோஹன கமகே பொதுமகன் ஒருவருக்கு கொடியினை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகள் இடம்பெற்றன.
தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு அனைத்துக் கிராமங்களிலும் இன் நிகழ்வு இடம்பெறவுள்ள.
-வவுனியா பிராந்திய செய்தியாளர்-






