வவுனியாவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம்!!(படங்கள்)

554

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வவுனியா பொலிஸ் நிலையமும் வவுனியா தெற்கு வலய கல்விப் பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த பேரணியானது இன்று (26.06.2015) நடைபெற்றது.

இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி வவுனியா பிரதான நகர்ப் பகுதியூடாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையினை சென்றடைந்தது.

இப்பேரணியில் பூந்தோட்டம் மகாவித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இந்துக் கல்லூரி, தமிழ் மகாவித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வெளிக்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயம் ஆகிய பாடசாலையின் மாணவர்களும்

வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சேமராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஞானப்பிரகாசம் இளையதம்பி மற்றும் அதிபர், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA