காக்கா முட்டை படத்தால் தனுஷ்க்கு சிக்கல்!!

609

Dhanush

தனுஷ் தயாரிப்பில் காக்கா முட்டை கடந்த இந்த 3 ஆம் திகதி வெளியானது. இப்படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் மணிவண்ணன் என்ற வழக்கறிஞர் காக்கா முட்டை படத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி முருகன் தனுஷ் மற்றும் வெற்றிமாறனை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.