வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய 125வது ஆண்டு விழா நேற்று 27.06.2015 மாலை 04.00 மணியளவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது
இந் விழாவின் பிரதம அதிதியாக திரு ஏ.பத்திநாதன் ( வடமாகாண சபையின் பிரதம செயலாளர் ) கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்டத்தின் குரு முதல்வர் பிதா ஏ.விக்ரர் சோசை அவர்களும் திருக்குடும்பக்கன்னியர் சபை மாகாணத் தலைவி அருட்சகோதரி கிறிஸ்ரா மரியதாஸ், வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வடமாகாணசபை உறுப்பினர் M.P.நடராஜ், மேலும் இவ் விழாவில்,
சர்வமதத் தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள், அரச-அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
அத்துடன் தபால்மா அதிபரின் பிரதிநிதி திரு.இரட்ணசிங்கம் (வடமாகண பிரதி அஞ்சல்மா அதிபர்) அவர்களினால் ஞாபகர்த்த அஞ்சல் முத்திரையும் வெளியிடப்பட்டது .சிறப்பம்சமாகும்.
மேலும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-











