அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் : முத்தையா முரளிதரன்!!

999

Murali

அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப், உலக வங்கி, தேசிய சைக்கிளோட்ட சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புக்களினால் விஹார மஹாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, சுகாதாரமான உணவு விழாவில் அதிதிகளில் ஒருவராக பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நான் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியலில் ஈடுபடுவதனால் விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பு பாதிக்கப்படும். இதனால் நான் எந்தவொரு கட்சியிலும் அரசியலில் ஈடுபட மாட்டேன்.

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.

வெளிநாட்டு பிராந்திய அணியொன்றுடன் இரண்டாண்டு கால ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் கதையே தவிர உண்மையில்லை என முரளிதரன் கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.