வவுனியா மாவட்டத்தில் நல்லாட்சியில் பிரஜைகள் கருத்திட்டத்தின் கீழ் தளபாடங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

703

வவுனியா மாவட்டத்தில் நல்லாட்சியில் பிரஜைகள் கருத்திட்டத்தின் கீழ் Search for Common Ground நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை விருத்தி செய்வதனை அடிப்படையாகக் கொண்டு வவுனியா வடக்கு பிரதேசசபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் வெங்கலச் செட்டிக்குளம் பிரதேசசபை ஆகியவற்றிற்கு மக்கள் மன்ற நடவடிக்கையின் கீழ் தளபாடங்கள் மற்றும் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் Search for Common Ground நிறுவன் உத்தியோகத்தர் இணைந்து பிரதேசசபைகளின் செயலாளர்களுக்கு இன்று (29.06.2015) காலை வழங்கிவைத்தனர்.

இதற்கான நிதிஉதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர்-

Vavuniya North PS (1) Vavuniya North PS (2) Vavuniya North PS (3) Vavuniya North PS (4) Vavuniya North PS (5) Vavuniya North PS (6)