வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி அலுவலகத்தினால் வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி பெண் நாய்களுக்கான கருத்தடை சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது யூலை 7ஆம் திகதிவரை இடம்பெற உள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற வவுனியா மாவட்ட வைத்திய சுகாதார அதிகாரி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறு மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.






