கொலை, களவுகளுடன் தொடர்புடைய இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

553

arrests

இந்தியாவில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர்னாகுளம் மஹாஜனா கல்லூரியின் பழைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய புவனச்சந்திரன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஷால் சாரங்க ஆகியோர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரியின் அரசியல் விஞ்ஞான பிரிவிற்குள் இரவில் நுழைந்த இவர்கள் கணினி, LCD தொலைக்காட்சி, 2 UPS மற்றும் பிரின்டர் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை களவாடியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சந்தேகநபர்கள் மது மற்றும் கஞ்சா பயன்படுத்தியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, திருத்தங்கல் பகுதியில் பிரபல ரவுடி எனக் கூறப்படும் பாறைத் தெருவை சேர்ந்த 29 வயதான பவுல்ராஜ் என்பவரை கொலை செய்த சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பவுல்ராஜ் கடந்த வாரம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். கொலையுடன் தொடர்புடைய 30 வயதான இலங்கை நபர் பாண்டி மற்றும் 17 வயது சிறுவன் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இக்கொலை வழக்கில் 3 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.