யாழில் மூவருக்கு மரண தண்டனை!!

578

jaffa

இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை வழங்கியுள்ளது.

2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் – கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

இதில் குற்றவாளிகளாக காணப்பட்ட சிவபாலன் கிருஷ்ணகுமார் மற்றும் சுந்தரலிங்கம் செந்தில்குமார் ஆகிய இருவருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

இதேவேளை, 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி மந்துவில் கிழக்கு பகுதியில் இளையவன் குஞ்சையா என்பர் உயிரிழந்தார்.

இது வழக்குடன் தொடர்புடைய குற்றவாளி ஆனந்தம் எஸ்லீன் என்பவருக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கம் மரண தண்டனையை வழங்கினார்.