வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியாவில் இயங்கிவரும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான “உயிரிழை” அமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்களான. தனேசிங்கம் பரமானாந்தன் அவர்களின் நிதி அனுசரணையில் உயிரிழை அமைப்பின் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 17 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக மெத்தைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு “உயிரிழை” அமைப்பின் தலைவர் ஏ.ஜெயக்காந்தன் தலைமையில் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் இன்று (02.07.2015 ) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு.எஸ்.சிறினிவாசன் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-