மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பலி!!

492

Accidnt

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகியோர் மடுத் திருத்தல ஆடித் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் மன்னார் நோக்கி பயணித்த வானும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குழந்தையொன்று மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.