பம்பலப்பிட்டியில் பூமியை ஆழமாக தோண்டுவதாலே நில அதிர்வு!!

665

Bambalapity

கொழும்பு பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தில் ஏற்­பட்ட நில­அ­திர்வு பூகம்­பத்­திற்­கான அதிர்வு அல்ல என அனர்த்த முகா­மைத்­துவ திணைக்­களம் தெரிவித்­தது.

கட்­ட­டங்­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக பூமியை ஆழ­மாகத் தோண்டி பதப்­ப­டுத்­து­வதன் அதிர்வே இதற்குக் கார­ண­மாகும் என்றும் அத்­தி­ணைக்­களம் தெரி­வித்­தது.

கொழும்பு பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை நில­அ­திர்வு ஏற்­பட்­ட­தாக சிலர் முறைப்­பாடு செய்­தனர்.

இத­னை­ய­டுத்து அனர்த்த முகா­மைத்­துவ திணைக்­களம், கட்­ட­டங்கள் மற்றும் அகழ்­வா­ராச்சித் திணைக்­க­ளத்­திடம் மக்­களின் இம்­மு­றைப்­பாடு தொடர்­பாக கேட்­ட­போது தமது தொழில்­நுட்பக் கருவி­க­ளுக்கு நில­அ­திர்வு தொடர்­பாக எது­வி­த­மான தர­வு­களும் பதி­வா­க­வில்­லை­யென்றும் பெரும்­பாலும் இவ்­வா­றான அதிர்­வுக்கு கட்­ட­டங்­களை அமைப்­ப­தற்கு முன்­ப­தாக பூமியைத் தோண்டி மெஷின்­க­ளினால் பதப்­ப­டுத்­தும்­போது ஏற்பட்ட அதிர்வுகளாக இருக்கலாம் என்று தெரிவிக் கப்பட்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்தது.