வல்வெட்டித்துறையில் இருந்து காணாமற்போன மாணவர்கள் கொழும்பில் மீட்பு!!

628

Missing

வல்­வட்­டித்­து­றையில் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் காணா­மற்­போன வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த பாட­சாலை மாண­வர்­களும் கொழும்பு கொம்­பனித் தெருவில் மீட்­கப்­பட்டு தம்­மிடம் ஒப்படைக்­கப்­பட்­டுள்­ள­தாக வல்­வெட்­டித்­துறைப் பொலிஸார் தெரி­வித்­தனர். இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வல்­வெட்­டித்­துறை பிள்­ளையார் கோவி­ல­டியைச் சேர்ந்த எஸ்.விஷ்­ணு­ராஜா (வயது 15), கம்பர்மலையைச் சேர்ந்த இ.தர்ஷன் (வயது 16), வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த பா.சுகிர்தன் (வயது 15) ஆகிய 3 சிறு­வர்­களும் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வவு­னி­யாவில் உற­வினர் ஒருவரின் பிறந்­த­தின நிகழ்­வுக்கு சென்று வரு­வ­தாக கூறிச் சென்­ற­வர்கள் அங்கு செல்­லாத நிலையில் உற­வி­னர்­களால் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் கொம்­பனித் தெருவில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்­றுக்குச் நேற்று முன்­தினம் சென்ற மூவரும் தங்­க­ளுக்கு வேலை தரு­மாறு கோரி­யுள்­ளனர். குறித்த மூவர் மீதும் சந்­தேகம் கொண்ட ஹோட்டல் உரி­மை­யாளர், சிறு­வர்­களின் பெற்­றோர்­களின் தொலை­பேசி இலக்­கத்தை பெற்று, தகவல் வழங்­கி­யுள்ளார்.

அத்­துடன், கொம்­பனித் தெரு பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­துள்ளார். சிறு­வர்­களை மீட்ட பொலிஸார் அவர்­களை அன்­றி­ரவு அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுடன் யாழ்ப்­பா­ணத்­துக்கு அனுப்பி வைத்­துள்­ளனர். பின்னர் வல்­வெட்­டித்­துறைப் பொலிஸார் சிறு­வர்­களை பொறுப்­பேற்றுக் கொண்டு விசா­ர­ணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் பின்னர் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலி ஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.