
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கபடுபவர் சங்கர். இவர் ஐ படத்திற்கு பிறகு அடுத்து எப்போது படம் இயக்குவார் என அனைவரும் காத்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று சங்கர், அடுத்து எந்திரன்- 2 படத்தை தான் இயக்கவுள்ளார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசை ஏ.ஆர். ரஹ்மான், ஹீரோவாக இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் தான் நடிக்கிறார்.
இப்படம் 2016ல் தொடங்கவுள்ளது, இருந்தாலும் கிராபிக்ஸ் வேலைகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டதென தெரிவிக்கப்படுகின்றது.





