மக்காவை தத்ரூபமாக படம் பிடித்த செயற்கைக்கோள்!!

324

Makka

விண்வெளியில் இருந்து மக்கா நகரை துபாய் செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பி உள்ளது.

2013ம் ஆண்டு துபாய்சட்–2 என்ற இந்த செயற்கை கோள் உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இதனை அமீரகம் மற்றும் கொரியாவைச் சேர்ந்த பொறியாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைகோள் தயாரிப்பில் அமீரக பொறியாளர்களின் பங்கு மகத்தான ஒன்று.

உலக இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை அனுசரித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் துபாயைச் சேர்ந்த செயற்கைகோள் மெக்காவை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இந்த படத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

இதில் மெக்கா நகரில் உள்ள புனித பள்ளிவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் தத்ரூபமாக காணப்படுகிறது.