
பெண்கள் உலகக் கிண்ணக் கால் பந்து இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி,அமெரிக்கா சம்பியன் ஆனது. கனடாவில் 7ஆவது பெண்கள் உலக கிண் ணக் கால்பந்து போட்டி கடந்த மாதம் 6 ஆம் திகதி தொடங்கியது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன.
லீக் மற்றும் நொக் –அவுட் சுற்று முடிவில் ஜப்பானும், அமெரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இறுதிப் போட்டியில் அமெரிக்கா 5-–2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. அமெரிக்காவின் லியோட் 3 கோல்களும் ஹாலிடேஇ ஹீத் ஆகிய வீராங்கனைகள் தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஜப்பான் அணி சார்பில் ஓகிமி, ஜான்ஸ்டன் ஆகி யோர் தலா ஒரு கோல் அடித்தனர். 3ஆவது முறையாக அமெரிக்க பெண்கள் அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.





