பஹ்ரேனில் மாடியில் இருந்து தவறி விழுந்த இலங்கைப் பெண் பலி!!

752

bharin

பஹ்ரேனிலுள்ள வீடொன்றின் மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பெண் ஒருவர் மரணித்துள்ளார்.

23 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பஹ்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க கடற்படையினருக்கு சொந்தமான வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை குறித்த இலங்கை பெண் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இவர் கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கைப் பெண் குடிபோதையில் இருந்துள்ளதாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அமெரிக்க கடற்படையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.