ஆபாசப் படம் வெளியானதால் ஓடி ஒளியவில்லை : நடிகை வசுந்தரா!!

553

Vasunthara

வட்டாரம், ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில் வசுந்தராவின் ஆபாசப் படங்கள் இணையத்தளங்களிலும், வட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அது வசுந்தராதானா அல்லது மாபிங் செய்யப்பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை.

இந்த ஆபாசப் படத்தை பார்த்து வசுந்தரா அதிர்ச்சியானார். திடீரென அவர் மாயமாகிவிட்டார். கையடக்கத் தொலைபேசியும் நிறுத்திவிட்டார். இதனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

பல மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ’புத்தர் ஏசு காந்தி’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தெரிவித்த வசுந்தரா..

எனக்கு நேர்ந்தது போன்ற சம்பவம் நிறையப் பெண்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது. இதுபோன்ற படங்களை நிறையப்பேருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். தங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே ஓடிஒளிய வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் என் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும். தமிழில் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன் என்று வசுந்தரா கூறினார்.