இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட கிரிக்கட் வீரர் லண்டனில் உயிரிழப்பு!!

510

Cricket player Dead

லண்டனில், இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் கிரிக்கெட் வீரர் ஒருவர் நெஞ்சுப்பகுதியில் பந்து தாக்கியதில் உயிரிழந்தார். லண்டனில் சறே, சேர்பிற்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டித்தொடரில் கலந்து கொண்ட மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பத்மநாதன் பாவலன் என்ற 24 வயதுடைய இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சேர்பிட்டன் லோங் டிட்டன் ரீகிரியேஷன் மைதானத்தில் கிரிக்கட் போட்டித்தொடர் ஒன்றில் விளையாடிக் ககொண்டிருந்த போது பாவலனின் நெஞ்சுப் பகுதில் பலமாக பந்து தாக்கியுள்ளது.

பாவலனைக் காப்பாற்ற மைதானத்துக்கு விரைந்த மருத்துவர்கள் கடுமையாக முயற்சிகள் எடுத்தபோதும் அவை பலனளிக்கவில்லை.

உயிரிழந்த பத்மநாதன் பாவலன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழையமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.