வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு வெள்ளியன்று வேட்புமனுதாக்கல்!!

555

TNA

வட­, கி­ழக்கில் தனித்துப் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை சகல தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

நேற்று அவ­ரது இல்­லத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நேற்று முன்­தினம் வவு­னி­யாவில் நாம் கூடி பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். குறிப்­பாக தேர்­தலை அணுகும் வியூ­கங்கள், விஞ்­ஞா­பன தயா­ரிப்பு, ஆசனப் பங்­கீடு குறித்து ஆழ­மாக நீண்­ட­நேரம் ஆராய்ந்­தி­ருந்தோம். ஆசனப் பங்­கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதனையடுத்து வேட்­பா­ளர்கள் இறுதி செய்­யப்­படும் செயற்­பா­டுகள் இன்றும் நாளையும் இடம்பெற­வுள்­ளன.

இத­னை­ய­டுத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று வட­கி­ழக்கு தேர்தல் மாவட்­டங்­களில் வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­ய­வுள்­ளது. கடந்த காலங்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வட­கி­ழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்­று­பட்டு தமது ஜன­நா­யக பல­மான வாக்­கு­களை வழங்­கி­யி­ருந்­தார்கள். அதே­நேரம் தற்­பொ­ழுதும் முக்­கி­ய­மான தரு­ணத்தில் இப்பொதுத் தேர்தல் இடம்பெறுவதால் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக கூட்டமைப்பின் கீழ் ஒன்று திரள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.