
இத்தாலியின் தாராந்தோ பிரதேசத்தில் வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதான இலங்கையரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று இலங்கையர்கள் கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் சன்திஸ்சீமா அனுன்ஷியான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் நிறை மாத கர்ப்பணி பெண்ணொருவரும் உள்ளதாகவும் இவர்கள் மூவரும் உயிரிழந்தவரின் உறவினர்கள் எனவும் இத்தாலி காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வீட்டிற்கு மேல் உள்ள வீட்டில் குடியிருந்த இரண்டு இத்தாலியர்களும் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





