
தமிழில் காதல் கொண்டேன் படம் மூலம் சோனியா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமானார். 2003ல் இப்படம் வந்தது. பின்னர் கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவனை 2006ல் திடீரென திருமணம் செய்து கொண்டார். 2010ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன்பிறகு சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். விவேக் ஜோடியாக நடித்த பாலக்காட்டு மாதவன் படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
சோனியா அகர்வாலுக்கு 33 வயதாகின்றது. எனவே மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கமானவர்கள் அவரிடம் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சோனியா அகர்வால் கூறும்போது, ‘‘நான் தற்போது தனியாக தான் இருக்கிறேன். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று மற்றவர்களோடு நட்புடன் பழகி தனிமையைப் போக்குகின்றேன்.
எனக்கு மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளது. என்னைப் புரிந்து கொண்டவர் கிடைத்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.





