பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி!!

416

Pak

இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் அணி சார்பாக ஹபீஸ் 103 ஓட்டங்களையும் சுஐப் மலிக் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்