எகிப்தில் இத்தாலி தூதரகத்தின் மீது கார்குண்டு தாக்குதல்!!

658

Egypt

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இத்தாலி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த கார்குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று காலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 04 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் தூதரக கட்டிடத்தின் ஒரு பகுதியும் சேதம் அடைந்ததுள்ளது.

பலியான ஒருவர் தூதரக ஊழியரா அல்லது, பொதுமக்களில் ஒருவரா என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.