பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. வவுனியா மாவட்டச் செயகலத்தில் இறுதிநாளான இன்று பல்வேறு கட்சிகள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வன்னித் தேர்தல் தொகுதியில் மொத்தமாக 30 கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன. இதில் 19 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் 11 சுயேட்சைக் குழுக்களும் அடங்கும்.
இதில் ஒரு பதிவுசெய்யப்பட்ட கட்சியினதும் ஒரு சுயேட்சைக் குழுவினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் கட்சிகளுன் விபரம் வருமாறு..
ஜெனசெத பெரமுன
JVP
முன்னிலை சோசலிச கட்சி
ஸ்ரீ லங்கா முஸ்ஸிம் காங்கிரஸ்
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி
ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சி
தமிழர் விடுதலைக் கூட்டணி
அகில இலங்கை தமிழர் மகா சபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பிரஜைகள் முன்னணி
ஐக்கிய தேசிய கட்சி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
ஈழவர் ஜனநாயக முன்னணி
ஐக்கிய மக்கள் கட்சி
ஐனநாயக ஜக்கிய முன்னணி
ஐக்கிய சமாதான முன்னணி
மௌவப் ஜனதா கட்சி
மற்றும் 11 சுயட்சை கட்சிகள்
-பிராந்திய செய்தியாளர்-






