குழந்தையை கூவிக் கூவி விற்ற மனிதர் கைது!!

626

Baby

பெண் குழந்தை ஒன்றை கூவி விற்ற மர்ம மனிதர் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்து மென்செஸ்டர் போர்டன் பகுதியில் உள்ள விக்டோரியா கடையொன்றுக்கு அருகே இன்று இளைஞர் ஒருவர் குழந்தை ஒன்றை தள்ளுவண்டியில் வைத்துகொண்டு வந்துள்ளார்.

குறித்த நபர் மக்கள் கூடியிருந்த பகுதியில் அந்த குழந்தையை விற்க பகிரங்கமாக முயற்சி செய்துள்ளார்.

குறித்த மர்ம மனிதர் குழந்தையை 1000 டொலர்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை வாங்க மூன்று பேர் அவரை அணுகியும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தப்பியோடியுள்ளார். எனினும் தீவிர தேடுதலுக்கு பின்;னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட 3 மாத குழந்தை பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளது.