
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இன்று மாலை 5.00 மணிக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிடுவார் என எதிர்பாரக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாடுகளை ஊடகவியலாளர்களிடம் தெரிவிப்பார் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இதன் போது இம்முறை இடம்பெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களிடம் தெளிவுபடுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.





