இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது!!

266

arrests

இலங்கையச் சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த 48 வயதுடைய சவுரிபால என்பவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டவராவார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்று அங்கு 12 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை வாங்கிக்கொண்டு சென்னை சென்றார்.

இவர் இராமேஸ்வரத்துக்கு பஸ்சில் சென்று கொண்டு இருப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து பொலிசார் பாம்பன் பாலத்தில் வைத்து அந்த பஸ்சை மறித்து சோதனை இட்டுள்ளனர்.

இதில் சவுரிபாலனிடமிருந்து ½ கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. குறித்த ஹெரோயினை இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு அவர் கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சவுரிபாலனை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.