
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி இன்று ஒருநாள் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன், திரையுலகில் புராண வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு பாணி வகுத்து மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனிடமும், இயற்கையிடமும், இசையிடமும் கலந்து விட்டார்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.





