மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.45 அளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மன்னார் சாவட்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும், மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளராக கடமையாற்றும் குடும்பஸ்தரான பஞ்சநாதன் என்ற 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், மது போதையில் தனியார் பேரூந்து தரிப்பிட பகுதிக்கு வந்த போதே அவரின் தலை மீது பேரூந்து ஏறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார், குறித்த தனியார் பேரூந்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு உயிரிழந்தவரின் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.






