பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹபீஸ்க்கு ஓராண்டுத் தடை!!

481

Hafees

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீசிய முறை, சர்ச்சையை உருவாக்கியது.

அவர் பந்தை எறிவது போல தெரிவதாக போட்டி நடுவர்கள் முறையிட்டதை தொடர்ந்து, பந்து வீச்சு சோதனைக்கு முகமது ஹபீஸை உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த 6ம் திகதி சென்னையில் உள்ள பந்துவீச்சு சோதனை மையத்தில் ஹபிஸை சோதித்து பார்த்தனர். அப்போது அவர் 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்தை எறிவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஐசிசிக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை இதே குற்றச்சாட்டால் தான் தடை செய்யப்பட்டார். மீண்டும் 2 வருடத்திற்குள் இதே குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதால் ஐசிசி விதிமுறைகள் படி இன்னும் 1 வருடத்திற்கு அவர் தடை செய்யப்பட்டார்.