நேற்று(18.07.2015) காலை வவுனியா சுவர்க்கா மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கருத்து தெரிவித்தார்..
50 வருடங்களாக நான் மக்களுக்கு செய்த சேவையை தப்போது இருப்பவர்களோடு ஒப்பிட முடியாது. பல கோடி பணத்தினைக் கொடுத்து விடுதலைப்புலிகள் மக்களை வாக்களிக்க விடமால் தடை செய்தனர். இதனை விடுதலைப் புலிகள் கூறிய போது இதை நடைமுறைப்படுத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு.
இந்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் பணம் வழங்கி தேர்தலில் போட்டியிடவில்லை. மக்கள் தான் எமக்கு பணம் தந்து போட்டியிட வைக்கின்றார்கள்.
தென்னிலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்று வந்தது என்று கூறுகிறார்கள். அரசாங்கம் மாறிவிட்டது என்கிறார்கள். உண்மையில் ஆள் தான் மாறியதே தவிர அரசாங்கம் மாறவில்லை. இதனை கூட்டமைப்பு மாற்றவில்லை. தென்னிலங்கைச்cசக்திகள் ஒன்றுபட்டு மாற்றின. அப்போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஆதரவளித்தனர். 5 இலட்சம் மக்கள் வாக்களித்த பின் தான் கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. ஆக இந்த மாற்றத்தை கூட்டமைப்பு கொண்டுவரவில்லை.
இப்பொழுது சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனே தமது தனது தலைவன் எனக் கூறுகின்றனர். இதனை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இது சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்தவிற்கான வெற்றி வாய்ப்பையே ஏற்படுத்துகிறது. மஹிந்தவை மீண்டும் வெல்ல வைப்பதற்கான வாய்ப்புக்களையே புலிகளின் பெயரைப் பயன்படுத்தி கூட்டமைப்பு செய்கிறது.
நான் பிரபாகரனுக்கு எதிரானவன் இல்லை. அவர் ஒரு சிறந்த துடிப்புள்ள இளைஞன். தலைமைத்துவத்திற்கு வரக் கூடியவர். அவருக்கு நான் பல கடிதங்களை எழுதினேன். ஆனால் அவரை நல்ல நிலைக்கு கொண்டு வராது இவர்கள் எல்லோரும் இணைந்து அவரை அழித்துவிட்டார்கள்.
என்னை துரோகியாக சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் நான் செய்த துரோகம் என்ன என்று கேட்டால் தெரியாது.
எனக்கு மந்திரி வேலை பார்த்திருக்க முடியும். அப்படியான வாய்ப்புக்கள் பல வந்தன. ஆனால் மக்களுக்காக அதை தட்டிக் கழித்தேன். வடமாகாண ஆளுனர் பதவி தருவதாக கூட முன்னர் மஹிந்த கேட்டிருந்தார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் செய்த தியாகங்களை உணரவேண்டும். இன்று சிலர் பணத்தை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள். ஆனால் அதன் உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஜெனீவா விவகாரத்தில் கூட என்ன நடந்தது. இந்தியா நடுநிலமை வகிக்கவேண்டும் என கேட்டேன். அது அயல்நாடு அதனை மீறி எதுவும் நடக்காது. அங்கிருக்கின்ற சில தமிழ்த் தலைவர்களுக்கு இங்குள்ள நிலமை புரியாது. அவர்களின் இஸ்ரத்திற்கு கூட்டமைப்பும் ஜெனீவா போய் பலதைச் செய்தது. கடைசியில் நடந்தது என்ன?
வன்னியில் போட்டியிடும் கூட்டமைப்பு எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் உடனடியாக வாபஸ் பெறவேண்மும் எனவும் தெரிவித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-






