ஆற்றில் மூழ்கி ஐவர் பரிதாபமாகப் பலி!!

565

AAdu

வலஸ்முல்லை – வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

48 வயதான தந்தை, 47 வயதான தாய், 21 மற்றும் எட்டு வயதான இரு மகள்கள், மகளின் நண்பியான 21 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.