
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன.
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதிரடியாக ஆடிய சர்பிராஷ் அகமட் 77 ஓட்டங்களையும் முஹமட் ஹபீஸ் 54 ஓட்டங்களையும் விளாச 50 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 316 ஓட்டங்களைக் குவித்தது.
இதன்படி வெற்றிக் கனியைப் பறிக்க 317 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற இலக்குடன் அடுத்ததாக இலங்கை களமிறங்கியது.
எனினும் லகிரு திரிமானே (56 ஓட்டங்கள்) தவிர ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற 41.1 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட அந்த அணி, 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியது.





