சுப்பர் ஸ்டார்கள் இல்லாமல் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த பாகுபலி!!

490

Bhabali

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதுமட்டுமில்லாது, உலகெங்கிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 303 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரிய சுப்பர் ஸ்டார்கள் எல்லாம் இல்லாமல் உருவான இப்படம், தென்னிந்திய சினிமாவிலேயே 300 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.

ஏற்கெனவே ரஜனி நடிப்பில் வெளிவந்த எந்திரன் படம் 290 கோடி வசூலித்ததுதான் இதுவரை தென்னிந்திய சினிமா வசூலித்த பெரிய சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை பாகுபலி முறியடித்துள்ளது.

இந்த வசூல் தொகையானது கடந்த சனிக்கிழமை வரையே கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்த படம் ஹிந்தியில் மட்டும் 50 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் இந்தியில் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. பாகுபலியின் இந்த வசூல் சாதனை இந்தி திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தின் முதல் பாகத்தின் பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் வெளியிடவுள்ளனர். இதுவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.